இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்: சசி தரூர் வாக்குறுதி!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (15:36 IST)
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி கரூர் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களிடம் சசி தரூர் பேசியபோது சிஏஏ சட்டம் என்பது தார்மீக ரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் தவறானது என்றும் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவை நான் பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை சந்தேகத்திற்கு இடமின்றி ரத்து செய்வோம் என்றும் இது எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த சட்டத்தால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் இதற்கு என்ன அர்த்தம் என்றும் பாகிஸ்தானை நிராகரித்து விட்டு இந்தியாவுக்கு வந்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்புபவர்கள் முஸ்லிமாக இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை தர மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments