பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இப்போது தேவையற்றது. சரத்பவார்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:17 IST)
சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தனர். ஆனால் இதற்கு லல்லு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில்  எதிர்க்கட்சி கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் மக்களவைத் தேர்தலை சந்திக்கலாம் என்றும் 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்டபோது பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தான் தேர்தலை சந்தித்து தேர்தலுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமரானார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் தெரிவித்தார். 
 
மக்கள் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பிரதமர் வேட்பாளராக இருக்கின்றாரா? இல்லையா? என்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்றும் கண்டிப்பாக இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார் 
 
இதனை அடுத்து மல்லிகார்ஜுனெ கார்கே பிரதமர் வேட்பாளராவதை சரத்பவார் விரும்பவில்லை என்பதை மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments