Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா விளம்பர தூதராக சானியா மிர்ஸா நியமனம்

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2014 (17:17 IST)
பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, தெலங்கானா மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் புதிய திட்டங்கள் குறித்து இந்திய அளவிலும் உலக அளவிலும், சானியா விளம்பரப்படுத்துவார் என அம்மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக இயக்குநர் ஜெயேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
 
தெலங்கானாவின் தூதராக நியமிக்கப்பட்ட நியமன கடிதத்துடன் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை சானியா மிர்ஸாவுக்கு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கான நிக்ழ்ச்சியின்போது வழங்கினார்.
 
அப்போது, சர்வதேச டென்னிஸ் தரப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருக்கும் சானியா, முதல் இடத்திற்கு வர வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.
 
தெலங்கானா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள வீராங்கனை சானியா மிர்ஸா, ஹைதராபாதை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments