ஹேமந்த் சோரனின் மனைவிக்கு முதல்வர் பதவி இல்லை: ஜார்கண்ட் முதல்வராகும் நபர் யார் தெரியுமா?

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:30 IST)
சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமன் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி கல்பனா சோரன் தான்  ஜார்கண்ட் மாநில முதல்வராக ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால்  தற்போது ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக சாம்பை சோரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்பனா சோரன் பெயர் முதல்வர் பதவிக்கான பெயர் பட்டியலில் முன்னிலையில் இருந்த நிலையில் திடீரென எம்எல்ஏக்களின் ஆதரவு சாம்பை சோரனுக்கு அதிகம் இருந்ததை எடுத்து அவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் சாம்பை சோரன் இன்று முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருக்கும் அவர் விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும்  ஜார்கண்ட் மாநிலம் உருவாவதற்கு போராடியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடப்படுகிறது. 
 
மேலும் ஜார்கண்ட் புலி என்று அழைக்கப்படும் நிலையில்  சாம்பை சோரன், அரசியலுக்கு முதல் முதலில் அவர் நுழைந்தபோது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது.. எதிர்த்து ரிட் மனு தாக்கல்..!
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments