Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாக முடிவெட்டிய சலூன் கடைக்காரர் !!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (20:36 IST)
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக முடி திருத்தம் செய்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட ஒரு சில மாநில விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் தற்போது 20-வது நாளாக தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லி மற்றும் அரியானா எல்லையான சிங்கு என்ற பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக முடி திருத்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து சலூன் கடைக்காரர் கூறியுள்ளதாவது :

குருஷேத்ராவில் உள்ள என் சலூன் கடைக்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவசாயிகள்தான். எனவே அவர்கள் தற்போது டெல்லியில் போராடி வருவதால் நானும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக டெல்லிக்கு வந்துள்ளேன். போராட்டம் முடிவும் வரைக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இவர் போன்றவர்களின் உதவியால் உந்துததால் விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments