Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (01:30 IST)
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் சீசனில் மொத்தம் ரூ.255 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வருமான கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை விட ரூ.45 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை அய்யப்பன் சீசன் மகரஜோதி தரிசனத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலின் மூலம் கிடைத்துள்ள வருமானத்தின் உதவியால் அடுத்த வருடம் வரும் அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து கொடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கும் வசதிக்கு நிகராக அய்யப்பன் பக்தர்களுக்கும் பல முக்கிய வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை செய்ய விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவிருப்பதாகவும் கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த வருடம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments