நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (13:25 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நிறைபுத்தரிசி  பூஜைக்காக நாளை மறுநாள், அதாவது ஜூலை 29 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த பூஜை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி  பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜைக்காக, பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லம் பகுதிகளிலிருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு எடுத்து வருவார்கள்.
 
சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு, அந்த நெற்கதிர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நிறைபுத்தரிசி  பூஜை வழிபாட்டிற்கு பிறகு, அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்று மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments