ரூ.600 கோடிக்கு அதிபதியான தாதா...பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை ,

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (19:35 IST)
பெங்களூருவில் பிரபல தாதாவை அவரது எதிரிகள் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.



 
லக்ஷ்மணா என்பவர் பெங்களூருவீல் மிகவும் பிரபலமான தாதா. இவர் தனது தன்னுடைய சகோதரர் ராமாவுடன் சேர்ந்து கொண்டு பெங்களூரு நகரையே ஆட்டிப்படைத்தார். இவர் மீது கொலை, கொள்ளை, நிலமோசடி, கொலை மிரட்டல் உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் தனக்கு எதிராக செயல்படுவர்களை தேடிச்சென்று கொன்றுவிடுவாராம். . கடந்த 2005- ம் ஆண்டு பெங்களூரில் மற்றொரு தாதாவான மாச்சா மஞ்சாவை லக்ஷ்மணா, தனது சகோதரர் ராமர் மற்றும் கும்பலுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து பிரபலமானார்.,
 
அதன் பிறகு பெங்களூருவில் செல்வாக்கு மிக்க தாதாவாக லக்ஷ்மணா மாறினார். இதன் விளைவாக  ரூ.600 கோடிக்கும்  அதிகமான சொத்துக்களை ரவுடிசித்தால் லக்ஷ்மணா சம்பாதித்தார்.
 
 இந்நிலையில்  லக்ஷ்மணா நேற்று தன் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார், மகாலக்ஷ்மி லேஅவுட் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, 5 பேர்  கொண்ட கும்பல் இவரின் காரை வழிமறித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லக்ஷ்மணா அவர்களிடத்தில் இருந்து தப்பி காரை வேகமாக ஓட்டினார்.
 
எனினும் விடாத அந்தக் கும்பல் மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் அருகே லக்ஷ்மணாவின் காரை மறித்தது. காரின் உள்ளே இருந்த லக்ஷ்மணா மீது மிளகாய்ப் பொடி வீசி வெளியே இழுத்தனர். பட்டப்பகலில் பல பேர்  பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த கும்பல் லக்ஷ்மணாவை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து . சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த போலீஸார் லக்ஷ்மணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லக்ஷ்மணா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments