Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் ரூ.500 க்கு சிலிண்டர் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்…

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (19:56 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழைகளுக்கு ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இன்று முதல்வர் அசோக் கெலாட் தொடங்கிவைத்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் நடைபெற்று வருகிறது. இங்கு, இன்னும்  மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழைகளுக்கு ரூ.500 விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில், வீடுகளுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ சிகிச்சை திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில், சமையல் எரிவாயு சிலிணர் திட்டத்தை இன்று  முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்தது.

இந்த மானிய விலை சிலிண்டர் திட்டத்தை விமர்சித்துள்ள பாஜக,பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் இன்றைய தேவை,ஆனால், சிலிண்டர் மானியம் ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments