Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 காசுக்கு ரூ.5 லட்சம் செலவு!!! அப்பப்பா...... முடியல.......

5 காசுக்கு ரூ.5 லட்சம் செலவு!!! அப்பப்பா...... முடியல.......

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (14:46 IST)
டெல்லியில் 5 காசு பிரச்சினைக்காக 41 ஆண்டாக வழக்கு நடந்து வருகிறது. இதற்காக ரூ.5 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.


 


டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர் ரன்வீர்சிங் யாதவ். இவர், 1973-ம் ஆண்டு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி சோதனையிட்டனர்.

அந்த பஸ்சில் பயணம் பயணி ஒருவர் 15 காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். அந்த இடத்துக்கு செல்ல 10 காசுதான் கட்டணமாகும். ஆனால், கண்டக்டர் ரன்வீர்சிங் 15 காசு வசூலித்து 10 காசுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து இருந்தார். மீதி 5 காசை தான் வைத்துக் கொண்டார். இதை பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

சஸ்பெண்டை எதிர்த்து ரன்வீர்சிங் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 1990-ம் ஆண்டு இதன் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ரன்வீர்சிங்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

ஆனால், டெல்லி அரசு போக்குவரத்து கழகம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இதன் இடைக்கால தீர்ப்பில் ரன்வீர்சிங்குக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டிய ரூ.6 லட்சம் பணிக்கொடை மற்றும் பல்வேறு பயன்பாடுகளை வழங்கும்படி கோர்ட்டு கூறியது.

இந்த வழக்கு 41 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தற்போது ரன்வீர் சிங்குக்கு 73 வயது ஆகிறது. இந்த வழக்குக்காக ரன்வீர்சிங்கும், அரசு போக்குவரத்து கழகமும் சேர்ந்து ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனாலும் 5 காசு பிரச்சினைக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments