கோயில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர்.. ஆனால் அதன்பின் ஏற்பட்ட அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (15:15 IST)
கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை பக்தர் ஒருவர் செலுத்திய நிலையில் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதை பார்த்து கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.  
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசனம் என்ற பகுதியில் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்மா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வந்த பக்தர் வருவார் 100 கோடி ரூபாய் காணிக்கையை செக் மூலம் உண்டியலில் செலுத்தினார். \
 
இவ்வளவு பெரிய தொகையை செலுத்திய பக்தர் ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்த நிலையில் அவரது  செக் போதிய பணம் என்று திரும்பி வந்துவிட்டதாக அறிந்து நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் 
 
மேலும் அவரது கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்தது. இது குறித்து அந்த பக்தரிடம் கேட்டபோது 100 கோடி ரூபாய் கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை, ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் இருந்தது என்னுடைய தவறல்ல என்று கூறினார். என்னுடைய ஆசையை விரைவில்  கடவுள் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தது நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments