நிதிமன்றத்தில் ரவுடியை சுட்டுக் கொன்ற மர்மநபர்கள்… போலிஸார் பதில் தாக்குதலில் இருவர் பலி!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (10:18 IST)
டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ஜிதேந்தர் ஜோகி என்ற ரவுடியை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பல்வேறு குற்றவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜிதேந்தர் ஜோகி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் போலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை நேற்று ஒரு குற்ற வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லி போலிஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு வழக்கறிஞர்கள் உடையில் இருந்த சிலர் துப்பாக்கியால் சரமாரியாக ஜிதேந்தரை சுட ஆரம்பித்தனர். அதில் சம்பவ இடத்திலேயே ஜிதேந்தர் உயிரிழந்தார்.

இதை எதிர்த்து போலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தாக்குதல் நடத்திய இருவரும் பலியாகினர். இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவும் சமூகவலைதளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஒரு ராஜ்சபா சீட்டுக்காக ஆன்மாவை விற்றவர் கமல்ஹாசன்: அண்ணாமலை விமர்சனம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் செய்த சின்ன தவறு.. வாழ்க்கையை இழந்து தவிக்கும் பரிதாபம்..!

தங்கையை கொன்று, சடலம் அருகே மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்த சகோதரன்.. பின்னர் போலீசில் சரண்.. என்ன நடந்தது?

இரவில் பாம்பாக மாறி என் மனைவி கடிக்கிறார். கலெக்டரிடம் கணவன் அதிர்ச்சி புகார்!

டீசல் மானியம் ரத்து! கலவர பூமியான ஈகுவடார்! - அவசரநிலை பிரகடனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments