Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட திருடன்(வைரல் வீடியோ)

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (10:30 IST)
திரைப்பட பாணியில் கொள்ளையன் ஒருவன் வீட்டில் திருடிவிட்டு ஜாலியாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அகமாதாபாத் காந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 2 வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் திருடிய கொள்ளையர்களில் ஒருவன் சிசிடிவி கேமராவை பார்த்து ஜாலியாக குத்தாட்டம் போடுகிறான். இந்த காட்சிகளை வைத்து போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 
கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை, கூலாக திருடிவிட்டு ஜாலியாக டான்ஸ் போட்ட இவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments