Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் ஸ்டிரைக்; புதிய போக்குவரத்து சட்டத்திற்கு கண்டனம்

நாடு முழுவதும் ஸ்டிரைக்; புதிய போக்குவரத்து சட்டத்திற்கு கண்டனம்
, புதன், 29 ஏப்ரல் 2015 (12:14 IST)
மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை 30ஆம் தேதி பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாள் சாலை விபத்துகளில் அதிகரித்து வருகின்றன. புள்ளி விவரங்களின்படி சாலை விபத்துகள் அதிகள் நிகழும் நாடுகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 1.38 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சாலை போக்குவரத்து சட்ட திருத்தத்தை விரைவில் மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுபற்றி அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டுள்ளது.
 
புதிய சாலை போக்குவரத்து சட்டத் திருத்தத்தின்படி தற்போது பயண்பாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்கள், வாகன பொ்மிட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்படும். அந்த நிறுவனங்கள் மட்டுமே இனி ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பெர்மிட்டுகளை பெற வேண்டும்.
 
அது தவிர, புதிய போக்குவரத்து சட்டத்தின்படி, ஹெல்ெமட் அணியாவிட்டால் ரூ.2500, சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 15 வருடங்களுக்கு மேல் பயண்பாட்டில் உள்ள வாகனங்களை இனி இயக்கமுடியாது.
 
இடையில் வாகனங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அந்த பழுதை நீக்காமல் புதிய உதிரிபாகங்களை வாகன நிறுவனங்களிடம் இருந்து வாங்கி  பொருத்த வேண்டும். விபத்தில் குழந்தைகள் இறந்தால் வாகன ஓட்டுநருக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமும், 7 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.
 
குடி போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும், 6 மாதங்களுகு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் ஓட்டினால் ரூ.1 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
 
மேலும், தலைக்கவசம் அணியாதிருப்பது, சிக்னல்களில் எல்லைக்கோட்டை தொடுவது, சீட் பெல்ட் அணியாதிருப்பது என ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதப் புள்ளிகள் தலா 3 கணக்கிடப்படும். 12 புள்ளிகள் வந்தால், லைசென்ஸ் ஒரு ஆண்டு ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் தண்டனை 2 மடங்காக  உயர்த்தப்படும்.
 
மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய சாலை போக்குவரத்து சட்டத்தை எதிர்த்து, போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை 30ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை பஸ், கார், லாரி, ஆட்டோ, டாக்சி என எந்த வாகனமும் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil