Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடினால் தீர்வு கிடைக்காது: நெற்றி அடி அடித்த நடிகை

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (11:35 IST)
காவிரிக்காக சாலைக்கு வந்து போராடினால் தீர்வு கிடைக்காது என்று நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 


 


காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த நடிகை ரம்யா காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை என்று கன்னட அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
 
இதுகுறித்து ரம்யா அவரது டுவிட்டர் பக்கத்தின் பதிவில் கூறியிருப்பதாவது:-
 
கர்நாடகா விவசாயிகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. காவிரியில் திறந்த தண்ணீரில் மாண்டியா விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர்.
 
தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு நாம் தான் காரணம். நாம் ஏன் அந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்றும், இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்றும் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். சாலைக்கு வந்து போராடினால் தீர்வு கிடைக்காது, என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments