Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 வருடங்கள் காங்கிரஸில் இருந்த பெண் இப்போது பா.ஜ.க,வில்!

24 வருடங்கள் காங்கிரஸில் இருந்த பெண் இப்போது பா.ஜ.க,வில்!
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (00:54 IST)
உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவராக இருந்தவர் ரீட்டா பகுகுணா.


 
 
இந்நிலையில், இவர் பா.ஜ.க, தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க,வில் இணைந்துள்ளார். இது குறித்து ரீட்டா பகுகுணா கூறியதாவது, ”காங்கிரில் 24 வருடம் அரசியல் நடத்தியுள்ளேன். தற்போது அங்கிருந்து விலகி பா.ஜ.க,வில் இணைந்துள்ளேன். நாட்டு நலனுக்காக கடுமையான முடிவை எடுத்துள்ளேன். எம்.எல்.ஏ., பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டேன். பா.ஜ.க, ஆட்சிக்கு கொண்டு வர கடுமையாக உழைப்பேன். 
 
சர்ஜிக்கல் தாக்குதல் ஆதாரம் கேட்பது ஏற்க முடியாதது. அனைத்து உலக நாடுகளும் சர்ஜிக்கல் தாக்குதலை அங்கிகரித்துள்ள நிலையில், ராகுலின் விமர்சனம், என்னை கோப பட வைத்துள்ளது. 
 
ராகுல் தலைமையை ஏற்க முடியாது. உத்திர பிரதேச மக்கள் காங்கிரசை நிராகரித்து, ராகுலை விட்டனர். மோடியும் பா.ஜ.க, மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்.”என்றார்.
 
உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை அறிவித்தது, ரீட்டாவுக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர் பா.ஜ.க,வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரிஷாவின் கணவர் இவரா! செட் ஆகுமா?