Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்?: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2015 (09:25 IST)
அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
அரிசி, இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் உள்ளது.
 
இந்த அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர், "உலக மயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
 
பருப்பு வகைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன. ஆனால் தர பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அசல் அரிசியுடன் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது.
 
இதை சாப்பிடும்போது, மிக மோசமான இரைப்பை நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அரிசி, பருப்பு, பழங்களை மொத்த வியாபார மண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்"  என்று கூறியுள்ளார்.
 
மேலும், பழங்கள் கால்சியம் கார்பைடு மற்றும் ரசாயனங்கள் சேர்த்து இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை அடுத்த மாதம் 20 ஆம் தேதி தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments