Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது மாணவியை பலாத்காரம் செய்த 19 வயது மாணவர்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (09:39 IST)
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் சி.பி.எஸ்.இ மாணவி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் அதே மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவரை அவருடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி என்ற மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் நேற்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடன் பள்ளியில் படித்த 19 வயது முன்னாள் மாணவர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர். இதேபோல் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிந்த் என்ற மாவட்டத்திலும் ஒரு பெண் தன்னை இரண்டு ஆண்கள் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். ஹரியானாவில் இளம்பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதால் முதல்வர் மனோகர்லால் கட்டார் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்