Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்த கள்ள நோட்டு, வங்கி மோசடிகள் – ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி அறிக்கை

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (20:17 IST)
கடந்த ஆண்டை விட அதிகமாக வங்கி மோசடிகளும், கள்ள நோட்டு புழக்கமும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

2018 – 2019 ம் நிதி ஆண்டின் அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் பணப்பரிவர்த்தனைகள், கள்ள நோட்டு புழக்கம், வங்கி மோசடிகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டைவிட வங்கி மோசடிகள் 74 சதவீதம் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய நிதியாண்டை விட இந்த ஆண்டு வங்கிகளில் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றை கண்டுபிடித்து சரிசெய்ய வங்கிகள் பல மாத காலங்கள் எடுத்து கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல மோசடி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முந்தைய ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் கள்ள நோட்டு புழக்கம் மிகவும் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2017-2018ம் ஆண்டில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சுமார் 9 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2018 – 19ல் இதன் எண்ணிக்கை 21 ஆயிரமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான 100 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடரும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments