Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பேப்பர் இல்லை பிளாஸ்டிக்: ரூபாய் நோட்டுகள் மாற்றம்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (15:19 IST)
புதிதாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.


 

 
பேப்பர் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நோக்கமாவது மத்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ளதா? என்று பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த  மத்திய நிதி துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது:-
 
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதற்கான மூலக்கூறுகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஷ்வர், மைசூர், கொச்சி ஆகிய நகரங்களில் முதலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 
 
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சராசரியாக 5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டது, என்று தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் தான் முதன்முதலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments