Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் ! மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:02 IST)
இந்தியாவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள கொரோனா ரேபிட் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனாவைக் கண்டறியப்படும் பிசிஆர் முறை பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் ராஜஸ்தான் மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில மாநில அரசுகளும் இதுபோன்ற முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் எப்போது பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments