9 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞன்:தெலுங்கானாவில் நடந்த கொடூரம்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (20:21 IST)
தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த நபரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியில் உள்ள அனுமகோண்டாவில் தாபா வைத்து நடத்திவருபவர் ஜெகன்-அர்ச்சனா தம்பதியினர்.

இவர்கள் நேற்று இரவு,அவர்களது 9 மாத குழந்தையுடன் தாபாவின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென்று முழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனையடுத்து ஜெகன், வீட்டின் அருகே பல இடங்களில் தேடி அலைந்துள்ளார்.

அப்போது ஒரு வீட்டின் மறுபுறம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அங்கு சென்று பார்த்தபோது பிரவீன் என்பவர் குழந்தையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ஜெகன் அங்கு செல்வதற்குள் பிரவீன் தப்பியோடியுள்ளார். பின்பு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே இறந்துவிட்டது.

மறுபக்கம் பிரவீனைத் தேடிக் கண்டுபிடித்த பொதுமக்கள், அவரை அடித்து உதைத்து அனுமகொண்டா காவ்ல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்