Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல விருப்பம்: டெல்லி காவல்துறை ஆணையர்

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2016 (12:27 IST)
சட்டம் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல விரும்புகிறோம் என்று டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து பி.எஸ்.பஸ்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். கற்பழிப்பு உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம்.
 
அனுமதி கிடைத்தால், அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டெல்லி காவல்துறை தயங்காது.
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என்று கருதுகிறோம்.
 
எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது.
 
பெண்கள் நலன்  என்று கூறி, வருத்தம் தெரிவிப்பவர்களை விட, காவல்துறையினராகிய நாங்கள் பெண்கள் நலனில் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு பி.எஸ்.பஸ்சி கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments