Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் புகார்

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (10:46 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய சட்டத்தை உருவாக்கும் அமைச்சர்களே பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகெளன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை ஏற்றுகொண்ட போலீசார் அமைச்சரின் மீது ஐபிசி 417, 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துளனர்.
 
இந்த வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும் தேவைப்பட்டால் அமைச்சர் ராஜென் மீதும் விசாரணை நடைபெறும் என்றும் நாகெளன் போலீஸ் கமிஷனர் ஷங்கர் ராய், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்