Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த கட்சியை விட்டு வெளியேறும் ராக்கி சாவந்த் பாஜகவில் சேர விரும்புவதாக தகவல்

Webdunia
திங்கள், 19 மே 2014 (16:35 IST)
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது சொந்த கட்சியான ராஷ்டிரிய ஆம் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராஷ்டிரிய ஆம் கட்சி என்னும் கட்சியை துவங்கி சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியை சந்தித்தார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட  இவர் 1,995 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்தார். 
 
இந்நிலையில் இது குறித்து ராக்கி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனது தவறுகளை தெரிந்துக்கொண்டதாகவும், விரைவில் பாஜகவில் இணைய மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க டெல்லி செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

Show comments