Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கான அதிகாரங்கள் டெல்லிக்கு பொருந்தாது;உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (18:35 IST)
டெல்லி யூனியன் பிரதேசம்தான், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அதற்கு பொருந்தாது என்றும், டெல்லிக்கான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இந்த மசோதா சட்ட ரீதியாக சரியானதே என்றும், டெல்லி நிர்வாக திருத்த மசோதா' விவாதத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நியமன எம்.பி.யுமான ரஞ்சன் கோகாய் இன்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியபோது, ‘கடைசி குடிசையில் தீ எரிந்தால், முதல் குடிசையில் இருப்பவனும் ஓடிச் சென்று அதை அணைக்க முயற்சிப்பான்; அதை செய்யவில்லை என்றால் தன் குடிசையும் எரியும் என அவனுக்கு தெரியும்; டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை ஆதரிக்கும் பிற கட்சி எம்.பி.க்களுக்கு நான் இதையே கூறிக்கொள்கிறேன் என்று கூறினார்,
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம் பேசியபோது, ‘மாநிலங்கள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா அல்லது மாநகராட்சிகள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா? கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை பறித்து அதிகாரம் இல்லாதவையாக மாற்றுவதை எப்படி புரிந்துகொள்வது? என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments