Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பிக்கள் உள்ளிருப்பு போராட்டம்; சாலைகளில் மக்கள் போராட்டம்! – பரபரப்பை ஏற்படுத்தும் விவசாய மசோதா!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (16:10 IST)
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய மசோதாவில் எதிர்கட்சிகள் குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவில்லை என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதை எதிர்த்து எதிர்கட்சியினர் பேசிய போதும் வெற்றிகரமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் விவசாய மசோதாவில் உள்ள ஆட்சேபணைகளை எதிர்கட்சிகள் கூறியும் அவற்றை திருத்தம் செய்யாமல் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து ராஜ்யசபா எதிர்கட்சி எம்பிக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் பீகாரில் விவசாய மசோதாவை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தியதால் போலீஸார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments