Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு..!

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (08:23 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் மக்களே, இந்தியாவுடன் இணைய வேண்டும் என  கோரிக்கை விடுவார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கும் நிலையில் இந்த பகுதி இந்தியாவுடன் ஒரு நாள் நிச்சயம் இணைக்கப்படும் என்று ஏற்கனவே இந்திய அமைச்சர்கள் கூறி வந்தனர். இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா கடும் கண்டனம் தெரிவித்து வந்தது என்பது தெரிந்தது.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தங்கள் நாட்டுக்கு சொந்தம் என்று இன்றுவரை கூறிவரும் பாகிஸ்தான் இந்திய அமைச்சர்களின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் நம்முடன் இணைய வேண்டும் என்று விரைவில் கோரிக்கை விடுப்பார்கள் என்றும் அப்போது இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

இந்தியா பொருளாதார அளவில் வளர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கண்டிப்பாக அவர்கள் ஒரு நாள் கோரிக்கை வெளியிட்டால் அதன் பிறகு இந்தியா அந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments