Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையிலும் யோகாசனம் மேற்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (12:29 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பொதுச்சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 

 
2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்நிலையில், லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்றார். அதிகாலையிலேயே மழை பெய்து கொண்டிருந்தது.
 
யோகா நடக்கவிருந்த மைதானத்தில் தண்ணீர் புகுந்தது. இருப்பினும் யோகா நிகழ்ச்சி தடை செய்யப்படவில்லை. தண்ணீர் நிரம்பிய மைதானத்தில் பலரும் நனைந்தபடி யோகா செய்தனர். அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் விரிப்புகள் விரித்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments