Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

800 ஆண்டுகளுக்கு பிறகு ’இந்து’ ஆட்சி - உளறிய ராஜ்நாத் சிங்; போட்டு உடைத்த சலீம்

800 ஆண்டுகளுக்கு பிறகு ’இந்து’ ஆட்சி - உளறிய ராஜ்நாத் சிங்; போட்டு உடைத்த சலீம்
, செவ்வாய், 1 டிசம்பர் 2015 (09:24 IST)
இந்தியாவில், 800 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதலாக ஒரு ‘இந்து’ ஆட்சியில் அமர்ந்துள்ளார் என்று பிரதமர் மோடியை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது பற்றி, சிபிஎம் எம்.பி. முகமது சலீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
மக்களவையில் திங்களன்று கேள்வி நேரம் முடிந்ததும், நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை தொடர்பான நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
 
இதற்கு அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அனுமதி மறுத்ததால், சிறிது நேரம் அமளி நிலவியது. இதனால் வேறுவழியின்றி, சகிப்பின்மை பற்றிய விவாதத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
 
அப்போது, மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் முகமது சலீம், “மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்ததை, “800 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்து ஆட்சிஅதிகாரத்திற்கு வந்துள்ளார்” என்று ராஜ்நாத்சிங் பாராட்டியதாகவும், இது ஆங்கில இதழ் ஒன்றில் வெளிவந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
 
முகமது சலீமின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ராஜ்நாத் சிங், தான் இப்படி ஒருகருத்தை ஒருபோதும் தெரிவித்ததில்லை என்று பதற்றப்பட்டார். சலீம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
“எனது நாடாளுமன்ற வாழ்க்கையில் இத்தகைய குற்றச்சாட்டை நான் சந்தித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு என்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது. இத்தகைய கருத்தை எந்த ஒரு உள்துறை அமைச்சர் சொல்லியிருந்தாலும் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. என்னை அவதூறாக பேசிய சலீம் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்; இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்றார்.
 
இதற்கு பதிலளித்த முகமது சலீம், “இந்தக் குற்றச்சாட்டை நானாக சொல்லவில்லை; ஒருபத்திரிகையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இது உண்மையல்ல என்றால் சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு ராஜ்நாத் சிங் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பி தன் நிலையை விளக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.
 
எனினும், பாஜகவினர் முகமது சலீமுக்கு எதிராக கூப்பாடு போட்டனர். எந்த இடத்தில் ராஜ்நாத் சிங் இதைத் தெரிவித்தார் என குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
அதற்கு பதிலளித்த சலீம், “ராஜ்நாத் சிங் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசும்போதுதான் இவ்வாறு கூறினார் என்று அந்த ஆங்கில இதழில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது” என அம்பலப்படுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil