Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்யும் கட்டணம் இரு மடங்காக உயர்வு

ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்யும் கட்டணம் இரு மடங்காக உயர்வு
, சனி, 7 நவம்பர் 2015 (07:51 IST)
ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்தால் அதற்காக பிடிக்கப்படும் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


 

 
ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து விட்டு, அந்த பயணச்சீட்டை ரத்து செய்து, பணத்தை திரும்பப்பெறும் போது குறிப்பிடட்ட தொகையை ரயில்வே பிடித்து வருகிறது.
 
பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான இந்த தொகையை 12 ஆம் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தி ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த புதிய விதிகளை ரயில்வே கொண்டு வருகிறது.
 
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
 
ரயில் புறப்பட்டு சென்ற பிறகு, முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்ய இனி முடியாது. ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னர் ரத்து செய்ய வேண்டும்.
 
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்வதற்கு, தற்போது படுக்கை வசதியுடன் கூடிய 2 ஆம் வகுப்பு பயணச்சீட்டுக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது ரூ.60 ஆக உயர்கிறது.
 
3 அடுக்கு ஏ.சி. வகுப்பு பயணச்சீட்டை ரத்துக்கான கட்டணம் ரூ.90 ல் இருந்து ரூ.180 ஆக அதிகரிக்கிறது.
 
ஆர்.ஏ.சி. பயணச்சீட்டைப் பொறுத்தமட்டில், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டும். அதன்பிறகு ரத்து செய்ய முடியாது.
 
படுக்கை வசதியுடன் கூடிய 2 ஆம் வகுப்பு பயணச்சீட்டுக்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. அது ரூ.120 ஆக உயர்கிறது. 2 அடுக்கு ஏ.சி. வகுப்பு பயணச்சீட்டை ரத்துக்கான கட்டணம் ரூ.100 ல் இருந்து ரூ.200 ஆக அதிகரிக்கிறது.
 
பயணச்சீட்டை ரத்து கட்டண உயர்த்தப்படடிருப்பது, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வசதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்பதிவு இல்லாத சாதாரண பயணச்சீட்டை வாங்குகிற கவுண்ட்டர்களில், ரயில் பயணச்சீட்டை ரத்துக்கான பணத்தை பெற அனுமதிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil