Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களின் அன்பு, மோடியின் வெறுப்பை வெல்லும் – வாக்களித்தபின் ராகுல் கருத்து !

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (12:26 IST)
வாக்களித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலில் மோடியின் வெறுப்பை எங்கள் அன்பு வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று ஆறாவது கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல மாநிலங்களுக்கு உட்பட்ட 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் கிட்டத்தட்ட 10.17 கோடி வாக்காளர்கள் பங்கேற்க உள்ளனர். வெயில் காரணமாக காலையிலெயே மக்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அவுரங்கசீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘ இந்தத் தேர்தல் மோடியின் வெறுப்புக்கும் எங்களின் அன்புக்கும் இடையில் நடக்கும் தேர்தல். கடுமையான போட்டி இருந்தாலும் இறுதியில் அன்புதான் வெல்லும்.

வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் விவசாயிகளின் பரிதாபமான நிலை ஆகியவை இந்த தேர்தலில் மக்களின் பிரச்சனையாக உள்ளன. ’ எனத் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments