கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் முடித்த ராகுல் காந்தி!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (17:04 IST)
கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் முடித்த ராகுல் காந்தி!
கன்னியாகுமரியில் போட்ட சபதத்தை காஷ்மீரில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நிறைவேற்றினார். 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பயணத்தை ஆரம்பித்தார். தமிழகம் முதல்வர் முக ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த இந்த பயணம் தமிழ்நாட்டில் இருந்து கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வழியாக சென்று இன்று காஷ்மீரில் முடிவடைந்துள்ளது. 
 
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இந்த பயணம் தொடங்கிய போது காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றுவோம் என ராகுல் காந்தி சபதம் எடுத்தார். அந்த சபதத்தை இன்று அவர் காஷ்மீரில் நிறைவேற்றி உள்ளார். காஷ்மீரில் உள்ள லால் சவக்கில் ராகுல் காந்தி கொடியேற்றி தனது சபதத்தை முடித்து வைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments