Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான ராகுல் காந்தி – காங்கிரஸிடம் எந்த பதிலும் இல்லை !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (13:03 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி கடந்த சில நாட்களாக எந்தத் தகவலும் இல்லை என்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிகமாக வெளியேத் தலைக் காட்டாத ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடுத் தொகுதிக்கு நன்றி தெரிவிக்க சென்றார். அதன் பிறகு அவர் வெளியே எங்கேயும் வரவில்லை. இந்நிலையில் நேற்று முதல்முதலாகக் கூடிய மக்களவையிலும் அவரைக் காணவில்லை. ராகுல் அடிக்கடி இதுபோல வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும். ஆனால் இம்முறைக் காங்கிரஸ்  நிர்வாகிகளுக்கே அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது தெரியவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments