Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க முடியாது: காங்கிரஸ் திட்டவட்டம்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (09:32 IST)
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்பு உள்ளது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 
 
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம் என நீதிமன்றம் நேற்று மீண்டும் அறிவுறுத்தியது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தி வரலாற்று உண்மைகளுடன் நெருக்கமான அறிவை பெற்றுள்ள ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அதனை உரிய நீதிமன்றத்தில் நிரூபிக்க தயார் என அவர் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments