Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: அசாமில் பெரும் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 22 ஜனவரி 2024 (09:58 IST)
அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ராகுல் காந்தி கூறியபோது, ‘கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்' என கேள்வி எழுப்பிய நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி என அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
மேலும் ராகுல் காந்தியை அங்கிருந்த சில இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தியதாகவும், ராகுல் காந்தி கோயிலுக்குள் நுழைந்தால், அது இந்து மதத்திற்கு அவமதிப்பாக இருக்கும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
 
இதையடுத்து, காவல்துறையினர் ராகுல் காந்தியிடம், கோயிலுக்குள் நுழையாமல், வெளியில் இருந்து வழிபாடு செய்யலாம் என்று கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, கோயிலுக்கு வெளியே இருந்து வழிபாடு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் ராகுல் காந்தி கோயிலுக்குள் நுழைய தடுத்து நிறுத்தப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அரசியல் கைப்பாவையாக காவல்துறையினர் செயல்படுவதை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments