Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் பிரதமர் புளுகுகிறார்! – பங்கமாய் கலாய்த்த ராகுல் காந்தி!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (18:34 IST)
இஸ்லாமியர்களை தடுக்கும் வகையில் எந்த மையங்களும் இந்தியாவில் இல்லை என பிரதமர் மோடி பேசியதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், வன்முறை சம்பவங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி ‘காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை தவறான பாதையில் அழைத்து செல்வதாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி இஸ்லாமியர்களையும், எதிர்கட்சிகளையும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் போகிறார் என பலர் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். இந்தியாவில் எங்கும் தடுப்பு முகாமே இல்லை என மோடி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பு முகாம்களுக்கு செல்வதற்கான பாதை மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவதாக ராகுல் காந்தி ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் “ஆர்.எஸ்.எஸ் பிரதமர் பாரதமாதாவிடம் பொய் சொல்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments