Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2015 (14:01 IST)
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்.
 
தமிழகத்தை புரட்டி போட்ட கனமழை தலைநகரை தடம் இல்லா நகராக மாற்றிவிட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். பல தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் ஆறுதலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
 
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நிதியும் அறிவித்து சென்றார். பல மாநிலங்களும் நிவாரண நிதிகள் வழங்கி வருகின்றன.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் சொல்ல சென்னை வருகிறார். சென்னை வரும் ராகுல் காந்தி சாலை மூலமாக சென்னை உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
 
ராகுலின் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments