Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு அஞ்சலி: மெழுகுவர்த்தி ஏந்த ராகுல்காந்தி வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (17:10 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்கள் என்ற செய்தி நாடு முழுவதையும் உலுக்கியது என்பது தெரிந்ததே 
 
போலீசாரால் தாக்கப்பட்டதால் மரணமடைந்த இந்த இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு கோலிவுட் திரையுலகினர், அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் குரல் எழுப்பியதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி இதுகுறித்த இந்த செய்திகள் தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக காவல்துறையை ஏற்கனவே கண்டித்து டுவிட் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்துமாறு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இன்று மாலை 7 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துமாறு ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொரோனா பரபரப்பு காரணமாக நான் நேரில் ஆறுதல் கூற சாத்தான்குளம் வரமுடியவில்லை என்றும் குறுஞ்செய்தி மூலம் தூத்துக்குடி காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments