Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைக்க வேண்டும்: ராகுல்காந்தி

மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைக்க வேண்டும்: ராகுல்காந்தி
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (18:40 IST)
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


 
 
இந்திய நாட்டின் வளர்ச்சி பணிக்காக மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள வில்லை என்றும் அவரது வளர்ச்சிக்காக மட்டும் தான் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி முன் வர வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil