Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2015 (12:52 IST)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுமுறை எடுத்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது.
 
இதனால், காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்காததால் ராகுல் காந்தி கோபத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தகவல் பரவியது. ராகுல் காந்தியின் இந்த விடுமுறை குறித்து பாஜக விமர்சனம் செய்து வந்தது.
 
இந்நிலையில்,  நாமாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த முக்கியமான தருணத்தில், ராகுல் காந்தியின் விடுமுறை அறிவிப்பு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவரும், அக் கட்சியின் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ உயர் நீதிமன்றத்தில் அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த மனுவில், "எம்.பி.யின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பெருமையை காக்கவும் ராகுல் காந்தியை தேடிகண்டுபிடிக்க வேண்டியது மிகவும் தேவையானது. ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்பில் உள்ளவர்.
 
மத்திய அரசிடம் முறையான தகவல் கொடுக்காமல் அவர் காமாணல் போகமுடியாது. எனவே ராகுல் காந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும்." என்று மனுதாரர் அசோக் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார்.
 
சில தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments