Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (07:42 IST)
22 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை என்று கூறப்பட்டாலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என பல மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் தீர்மானம் இயற்றி உள்ளனர் 
 
மேலும் ஒற்றுமை பாதயாத்திரையை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு ராகுல்காந்தி டெல்லி சென்று உள்ளதால் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments