Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரபேல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:09 IST)
ரபேல் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட தேவையில்லை என்றும், அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் ரபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், எனவே ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தால் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான மத்திய பாஜக அரசுக்கு இந்த தீர்ப்பு நிம்மதியை அளித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments