Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்திவைக்கப்பட்டது பஞ்சாப் தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (14:36 IST)
பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்கும்படி அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 14 தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 16ம் தேதி ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக பல்வேறு பஞ்சாப் மக்களும் உத்தர பிரதேசம் செல்வது வழக்கம்.

இதனால் தேர்தலில் வாக்களிப்பது பாதிக்கப்படும் என பஞ்சாப் அனைத்து கட்சிகளும் தேர்தல் தேதியை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. அதை தொடர்ந்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments