Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடித்தது ஐ.இ.டி வெடிகுண்டு!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (18:37 IST)
பஞ்சாப் நீதிமன்றத்தில் வெடித்தது ஐ.இ.டி வெடிகுண்டு என தேசிய பாதுகாப்பு படை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது குறித்து லூதியான காவல்துறை ஆணையர் தெரிவித்திருப்பதாவது, லூதியானா நீதிமன்றத்தின் 2வது தளத்தில் ஆவண அறைக்கு அருகே குண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தடய அறிவியல் பிரிவினர் சண்டிகரில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேச விரோத சக்திகள் இதை செய்துள்ளனர். அரசு கவனமாக உள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை குண்டு வெடித்த பகுதியை சோதனையிட்டு வெடி பொருட்களின் தடயவியல் மாதிரிகளை சேகரித்தனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அவை (IED) ஐ.இ.டி வகையை சேர்ந்தது என தெரியவந்துள்ளதாக என்.எஸ்.ஜி குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments