Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த மகன், தாய் செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

Siva
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (08:02 IST)
புனே நகரில் உள்ள மெட்ரோ தண்டவாளத்தில் தவறி மகன் விழுந்ததை அடுத்து அவரை காப்பாற்ற தாயும் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
புனே மெட்ரோ தண்டவாளம் அருகே  சிறுவன் ஒருவன் சென்று கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி தண்டவாரத்தில் விழுந்தார். இதை பார்த்த தாய் குழந்தையை காப்பாற்ற தானும் தண்டவாளத்தில் குதித்தார். 
 
அந்த நேரத்தில் மெட்ரோ ரயில் வரும் நேரம் நெருங்கி விட்டதை அடுத்து அருகே நின்றிருந்த காவல் படை வீரர்கள் உடனடியாக தாய் மகனை காப்பாற்ற உதவி செய்தனர் 
 
அப்போது மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாவலர்கள் எமர்ஜென்சி பட்டனை அழுத்தி மெட்ரோ ரயில், நிலையத்துக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டனர். தாய், மகன் பத்திரமாக மீட்கப்பட்ட பின்னரே மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து சமயோசிதமாக எமர்ஜென்சி, பட்டனை அழுத்திய பாதுகாப்பு காவலருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகள் தண்டவாளத்தில் விழுந்து விடாமல் இருக்க  போதிய தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் செய்ய வேண்டும் என்றும்  பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

அடுத்த கட்டுரையில்
Show comments