Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” முதல்வருக்கு லெட்டர் போட்ட கவர்னர்

Arun Prasath
திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:45 IST)
நாராயணசாமி கிரண் பேடி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவ அமைப்பினர், சிறுபான்மையினர், எதிர்கட்சிகள் என அணி அணியாக திரண்டு போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே புதுவை சட்டப்பேரவையில் வருகிற 12 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்நிலையில் புதுவையின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திருத்ததிற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள முடியாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments