Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகளுக்குதான் முதல் தடுப்பூசி! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:08 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முதலில் அரசியல்வாதிகளுக்கு செலுத்த வேண்டுமென புதுச்சேரி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் அவசர உபயோகத்திற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மக்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் போபாலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் இறந்ததாக வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுந்தியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்படுவதால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர மாட்டார்கள் என்றும், அதனால் மக்கள் நம்பிக்கையை பெற முதலில் அரசியல்வாதிகளுக்கு இந்த மருந்தை செலுத்த வேண்டும் என்றும் கொரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments