Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு: விருப்பமுள்ளவர்கள் வரலாம்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (13:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளி திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனேகமாக முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுவை மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் கூறியபோது ’புதுவையில் உள்ள பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வந்து தங்களுடைய சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 18 முதல் பள்ளிகள் முழுவதுமாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
புதுவையில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments