Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 9,10,11 வகுப்புகளுக்கும் விடுமுறை: ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (07:32 IST)
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அறிவித்திருந்தார்
 
அதுமட்டுமன்றி 9 10 11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி 9 10 11 ஆம் வகுப்புகளுக்கும் மார்ச் 22ஆம் தேதி முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டதோடு ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என ஆளுனர் அறிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பின் காரணமாக புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments